பங்குச்சந்தை, ரூபாய் மதிப்பு சரிவு

பங்குச்சந்தை, ரூபாய் மதிப்பு சரிவு
Updated on
1 min read

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, சற்று குறைந்துள்ளது. நேற்று வர்த்தக முடிவின் போது ரூபாய் மதிப்பு 5 காசுகள் குறைந்து, 62.36 என்ற நிலையில் இருந்தது.

இந்நிலையில் இன்று காலையில், அந்நியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு, மேலும் 6 காசுகள் குறைந்து 62.42-ஆக காணப்பட்டது.

வங்கிகள், இறக்குமதி நிறுவனங்கள் ஆகியவை, அதிக அளவில் டாலரை வாங்குவதன் காரணமாக, டாலருக்கு தேவை அதிகரித்து, ரூபாய் மதிப்பு குறைந்துள்ளதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

பங்குச்சந்தை சரிவு:

இதற்கிடையில், காலை வர்த்தக துவக்கத்தின் போதே, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 39.47 புள்ளிகள் குறைந்து 20,815.45 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 13.75 புள்ளிகள் குறைந்து 6,188.10 புள்ளிகளாகவும் இருந்தன. அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளதாக பங்குவர்த்தக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in