

தங்கம் விலை வியாழனன்று ரூ.450 அதிகரித்து 10 கிராமுக்கு ரூ.29.100 ஆக உயர்ந்துள்ளது. உள்ளூர் தேவை மற்றும் உலகச் சந்தை விலை உயர்வினால் இந்த விலை உயர்வு உள்நாட்டுச் சந்தையிலும் ஏற்பட்டுள்ளது.
அதே போல் வெள்ளி விலை ரூ.1,050 அதிகரித்து கிலோவுக்கு ரூ.41,350 ஆக உள்ளது.
உலகச் சந்தையில் தங்கம் விலை 0.44% அதிகரித்து அவுன்ஸ் ஒன்றிற்கு 1,225 டாலர்களாக அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் சந்தையில் வெள்ளி விலை 0.63% அதிகரித்து அவுன்ஸுக்கு 17.43 டாலர்களாக உள்ளது.
தலைநகர் டெல்லியில் 99.9% ரகச் சுத்தத் தங்கம் ரூ.450 அதிகரித்து 10 கிராமுக்கு ரூ.29,100 ஆகவும் 99.5% ரகச் சுத்தத் தங்கம் ரூ.450 அதிகரித்து 10 கிராமுக்கு ரூ.28,950 ஆக அதிகரித்தது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை ரூ.400 சரிவு கண்ட பிறகு இன்று மீண்டும் உயர்வடைந்துள்ளது.
ஒரு பவுன் (8கிராம்) விலை ரூ.100 அதிகரித்து ரூ.24,300 ஆக உள்ளது.