கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் வைத்துள்ள நிலுவை ரூ.6,598 கோடி: மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்

கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் வைத்துள்ள நிலுவை ரூ.6,598 கோடி: மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்
Updated on
1 min read

கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு ஆலைகள் ரூ.6,598 கோடி நிலுவை வைத்துள்ளதாக மாநிலங்களவையில் அமைச்சர் தெரிவித்தார். கடந்த மாதம் வரை கணக்கிடப்பட்ட நிலுவைத் தொகையின் அளவு இது என்று மாநிலங்களவையில் பதில் அளிக்கையில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை இணை அமைச்சர் சி.ஆர். சவுத்திரி இத்தகவலைத் தெரிவித்தார்.

கடந்த சந்தை ஆண்டில் (2015-16 அக்டோபர்-செப்டம்பர்) ஆலைகள் அளிக்கவேண்டிய தொகை ரூ.5,368 கோடி, முந்தைய ஆண்டு (2014-15) நிலுவைத் தொகை ரூ.577 கோடி, அதற்கு முந்தைய ஆண்டு (2013-14) நிலுவைத் தொகை ரூ.653 கோடி என்று அமைச்சர் கூறினார்.

கரும்பு பயிரிடும் விவசாயி களுக்கு தொகை வழங்குவது என்பது தொடர் நடவடிக்கை யாகும். ஆலைகள் அளிக்க வேண்டிய நிலுவைத் தொகையால் பாதிக்கப்படும் விவசாயிகளின் எண்ணிக்கை பருவத்திற்கு பருவம் மாறுபடும். இத்தகைய நிலுவைத் தொகையால் எவ்வளவு விவ சாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் அரசின் வசம் இல்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

2015-16-ம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஆலைகள் அதிகபட்சமாக ரூ.2,877 கோடியும், தமிழகம் ரூ.1,030 கோடி யும் நிலுவை வைத்திருந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அதிகம் கரும்பு உற்பத்தியாகும் மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.411 கோடியாகவும், பஞ்சாப் ரூ.226 கோடி, உத்தராகண்ட் ரூ.209 கோடி, குஜராத் ரூ.203 கோடி, ஹரியாணா ரூ.126 கோடி, கர்நாடகம் ரூ.108 கோடி என்ற அளவில் நிலுவை வைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

ஊழியர் இழப்பீடு மசோதா

ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய இழப்பீட்டுக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா இதை தாக்கல் செய்தார்.

தற்போது உள்ள தொழிலாளர் சட்டத்தின்படி இழப்பீட்டுத் தொகை ரூ.300-க்கும் அதிகமாக தேவைப்பட்டால் வழக்கு தொடர லாம் என்று உள்ளது. இத் தொகை ரூ. 10 ஆயிரமாக உயர்த்த புதிய மசோதா வகை செய்கிறது.

தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்தின் போது பாதிக்கப்படும் தொழிலாளி மற்றும் அவரைச் சார்ந்தோருக்கு அளிக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தவும், பின்னர் இது ரூ.1 லட்சமாகவும் அதிகரித்துக் கொள்ள புதிய மசோதா வகை செய்கிறது.

இழப்பீடு அளிக்காத தொழில் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக் கவும் வகை செய்யப்பட்டுள்ளது. 1923-ம் ஆண்டு தொழிலாளர் இழப்பீட்டு சட்டத்தில் திருத்தம் செய்து புதிய மசோதா கொண்டு வரப்படுகிறது. சட்ட ஆணையம் பரிந்துரையின் படி இந்த மசோதாவின் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in