தனிநபர் ஜிடிபி என்றால் என்ன?

தனிநபர் ஜிடிபி என்றால் என்ன?
Updated on
1 min read

தனிநபர் ஜிடிபி (Per Capita GDP)

உலக நாடுகளை ஜிடிபி-யின் படி வரிசைப்படுத்தினால் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது, பத்தாவது இடத்தில ரஷியாவும், பதினொன்றாவது கனடா, பன்னிரண்டாவது ஆஸ்திரேலிய என உள்ளது நமக்கெல்லாம் தெரியும். இந்தியாவைவிட ரஷியா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளும் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் என்று. ஆக, ஜிடிபியை அடுத்து பொருளாதார முன்னேற்றத்தை அறிய நமக்கு வேறு ஒரு புள்ளிவிபரம் தேவைப்படுகிறது, அது தான் தனிநபர் ஜிடிபி.

லதா, மீனா ஆகிய இருவரின் குடும்பங்கள் ஒவ்வொன்றும் ரூ. 10,000 மாத வருமானம் பெறுகின்றன. இரு குடும்பங்களும் ஒரே பொருளாதார நிலையில் உள்ளனவா? லதா குடும்பத்தில் நான்கு நபர்கள், ஒவ்வொருவரும் சராசரியாக ரூ. 2,500 பெறுகின்றனர். மீனா குடும்பத்தில் ஐந்து நபர்கள், ஒவ்வொருவரும் சராசரியாக ரூ. 2,000 பெறுகின்றனர். சராசரி வருமானத்தை கணக்கிட்டால் பொருளாதாரத்தின் உண்மை நிலை தெரியவருகிறது. சராசரி வருமானத்தை எவ்வாறு கணக்கிட்டோம் மொத்த வருமானத்தை குடும்ப நபர்களின் எண்ணிக்கையால் வகுத்தால் சராசரி வருமானம் கிடைக்கும். இது போல, ஒரு நாட்டின் ஜிடிபியை அந்நாட்டின் மக்கள் தொகையால் வகுத்தால் தனிநபர் ஜிடிபி (Per Capita GDP) கிடைக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in