

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டிருக்கும் 30 பங்குகளின் சந்தை மதிப்பு 100 லட்சம் கோடி ரூபாய் என்ற முக்கிய இலக்கை நெருங்குகிறது.
இந்த நிறுவனங்களின் தற்போதைய சந்தை மதிப்பு 97,13,196 கோடி ரூபாயாக இருக்கிறது. 100 லட்சம் கோடி ரூபாயை அடைய இன்னும் 2.86 லட்ச ரூபாய் குறைவாக இருக்கிறது. டாலர் மதிப்பில் பார்க்கும் போது இந்த பங்குகளின் மதிப்பு 1.58 டிரில்லியன் டாலராக இருக்கிறது. (ஒரு டாலர் 61.41 ரூபாய் என்ற மதிப்பில்)
2007-ம் ஆண்டு சென்செக்ஸ் பங்குகளின் சந்தை மதிப்பு டிரில்லியன் டாலர் என்னும் இலக்கை முதன் முதலில் எட்டியது. ஆனால் அதன் பிறகு 2008-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடி வந்த போது டிரில்லியன் டாலரில் இருந்து சரிந்தது.
மீண்டும் 2009-ம் ஆண்டு மே மாதம் டிரில்லியன் டாலர் இலக்கை எட்டியது. நடப்பாண்டில் சென்செக்ஸ் 31.86 சதவீதம் உயர்ந்திருக்கிறது. புள்ளிகள் அடிப்படையில் பார்த்தால் 6745 புள்ளிகள் உயர்ந்திருக்கிறது.