Published : 24 Mar 2017 10:30 AM
Last Updated : 24 Mar 2017 10:30 AM

இவரைத் தெரியுமா?- ஆலிவர் புளூம்

ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான போர்ஷே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2013-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2015-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து போர்ஷே நிறு வனத்தின் நிர்வாகக் குழுவின் தலைவர் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.

1994-ம் ஆண்டு ஆடி நிறுவனத் தில் பயிற்சியாளராக பணிக்குச் சேர்ந்தவர்.

பிரவுன்ஸ்வெக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் இன்ஜி னீயரிங் பட்டமும் ஷாங்காயில் உள்ள டோன்ஜி பல்கலைக் கழகத்தில் வாகன தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

2009-ம் ஆண்டிலிருந்து 2013-ம் ஆண்டு வரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் உற்பத்தி மற்றும் திட்டமிடுதல் பிரிவுக்கு தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

2003-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ஆடி நிறுவனத் தில் திட்டமிடுதல் பிரிவுக்கு தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x