

அன்னிய செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 23 பைசா சரிந்து ரூ.62.83 ஆக இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக வீழ்ச்சி கண்டுள்ளது கவனத்துக்குரியது. அன்னிய செலாவணி சந்தையில் மாத இறுதியையொட்டி, ஏற்றுமதியாளர்களிடையே அமெரிக்க டாலருக்கான தேவை மிகுதியாக இருப்பதே இந்த சரிவுக்குக் காரணம். முன்னதாக, வர்த்தகம் நேற்று மாலை முடிவடைந்தபோது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 37 பைசா குறைந்து 62.60 ரூபாயாக இருந்தது. இதனிடையே, மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, சென்செக்ஸ் 118.18 புள்ளிகள் சரிந்து 19,782.78 ஆக இருந்தது.