வாரிசு அரசியலுக்கு அடிபணிந்தார்கள் - பாஜக தாக்கு

வாரிசு அரசியலுக்கு அடிபணிந்தார்கள் - பாஜக தாக்கு

Published on

வாரிசு அரசியலின் நிர்பந்தம் காரணமாகவே அவசரச் சட்டத்தை மத்திய அமைச்சரவை வாபஸ் பெற்றதாக பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "இது ஒழுக்க நெறிமுறைகள், சட்டப்பூர்வத்தன்மை, அரசியல் சாசனத்தின்படி செல்லத்தக்கதுதானா என்பதையெல்லாம் ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல. வாரிசு அரசியலின் நிர்பந்தம் காரணமாகவே பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது. '' இப்போது நடைபெற்றுள்ள சம்பவங்கள், இந்த அரசுக்கு பிரதமரையும், அமைச்சரவையையும் விட வாரிசு அரசியல்தான் முக்கியம் என்ற பாஜகவின் கருத்தை நிரூபிப்பதாக உள்ளன. அரசு எடுத்த முந்தைய நிலையால் ஏற்பட்ட பாதிப்பை குறைப்பதற்காக வாரிசு அரசியலின் தலையீடு நடைபெற்றுள்ளது. நடந்தது அனைத்தும் நகைப்புக்கிடமான நாடகம்" என்றார் ரவி சங்கர் பிரசாத்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in