

ஆன்லைன் பேமென்ட் துறை யில் இயங்கிவரும் மணி ஆன்மொபைல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தி லிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை கால்பியன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை டாய்சாப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர். இதே நிறுவனத்தின் இணை நிறுவனர் பொறுப்பிலும் இருந்தவர்.
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு உறவுகள் பிரிவில் இளநிலை பட்டமும் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.
மைமொபைல் பேமெண்ட் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார்.
பன்னாட்டு உறவுகள் கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்து வருகிறார்.