Last Updated : 10 Oct, 2013 02:46 PM

 

Published : 10 Oct 2013 02:46 PM
Last Updated : 10 Oct 2013 02:46 PM

அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவராகிறார் ஜேனட் யெலன்

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவராக ஜேனட் யெலனை அதிபர் ஒபாமா நியமிக்கப்பட உள்ளார். இப்போது ஃபெடரல் ரிசர்வின் துணைத் தலைவராக இவர் உள்ளார். கடந்த 100 ஆண்டுகளில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவராக பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இப்போது தலைவராக உள்ள பென் பெர்னான்கேவுக்கு ஏற்கெனவே இரண்டு முறை பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டுவிட்டது. இவரது இரண்டாவது பதவி நீட்டிப்பு ஜனவரி 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இவரது நியமனத்துக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். அமெரிக்காவில் கடன் பெறும் அளவை அதிகரிக்கவேண்டும் என்பதில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடு காரணமாக அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இவர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபெடரல் ரிசர்வ் தலைவராக தனது பொருளாதார ஆலோசகர் லாரி சமர்ஸை நியமிக்க ஒபாமா முடிவு செய்திருந்தார். ஆனால்அதற்கு ஆளும்கட்சியிலேயே பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்தே ஜேனட் தேர்வு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்தவர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பெர்க்ளி பல்கலையில் பொருளாதாரப் பேராசிரியராக பணியாற்றியவர். பெடரல் இயக்குநர் குழுவில் 1994 முதல் 1997 வரை பணியாற்றினார். முன்னாள் அதிபர் பில் கிளின்டனில் பொருளாதார ஆலோசகராக இருந்துள்ளார். ரியல் எஸ்டேட் துறையில் மிகப் பெரும் நெருக்கடி ஏற்படும் என்று முன்கூட்டியே கணித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x