

வரி ஏய்ப்பைத் தடுக்கும் நோக்கில் செஷல்ஸ் நாட்டுடன் வரி தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் (டிஐஇஏ) விரைவில் அமலுக்கு வர உள்ளது.
ஒப்பந்தம் நடைமுறைக்கு வந் தால் செஷல்ஸிலிருந்து இந்தியா வுக்கு வரும் முதலீடுகள் தொடர் பான விவரங்கள் முழுவதுமாக இந்தியாவுக்குக் கிடைக்கும். அதேபோல இங்கு செய்யப்பட்ட முதலீடுகளை திரும்ப எடுத்துச் செல்லும்போது அதுபற்றிய தகவலை இந்தியாவிடமிருந்து செஷல்ஸ் பெறலாம்.
இந்த ஒப்பந்த விவரத்தை செப்டம்பர் 8-ம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.