

சர்வதேச இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், இந்தியாவின் பிக் பாஸ்கட் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கான முதல் கட்ட பேச்சு வார்த்தையைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சு வார்த்தையின் முடிவில் நிறுவனங்கள் இணைப்பு நடக்காமல் போகலாம், ஆனால் பேச்சு வார்த்தை தொடங்கி இருக்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிக் பாஸ்கட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இந்த தகவல் உண்மை அல்ல என்று மறுத்திருக்கிறார். ஆனால் அமேசான் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இது தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
கடந்த ஆண்டு பிக்பாஸ்கட் நிறுவனம் 15 கோடி டாலர் நிதி திரட்டியது. இந்தியாவில் 25 நகரங்களில் செயல்பட்டு வருகிறது.
அமேசான் நிறுவனமும் அமேசான் நவ் என்னும் பெயரில் இந்தியாவில் இ-காமர்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறது. ஹைதராபாத், டெல்லி, பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் அமேசான் நவ் செயல்பட்டு வருகிறது.