

ஏர் இந்தியா மற்றும் நஷ்டத்தில் இருக்கும் 28 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விலக்கிக்கொள்ள நிதி ஆயோக் பரிந்துரை செய்திருக்கிறது. ஆர்எஸ்எஸ் சார்பான பாரதிய மஸ்தூர் சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் நிதி ஆயோக் பரிந்துரையை எதிர்த்திருக்கின் றன. இந்த விஷயதின் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
மத்திய அரசு அனைத்து தரப் பினரையும் கலந்து விவாதித்து அந்த நிறுவனங்கள் எப்படி மேம் படுத்துவது என்பது குறித்து விவாதிக்க வேண்டுமே தவிர அந்த நிறுவனங்களின் பங்குகளை விலக்கிகொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இல்லை என்றால் இந்த முடிவை எதிர்த்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண் டும் என்று பிஎம்எஸ் சங்கத்தின் பொதுச் செயலாளர் விர்ஜேஷ் உபாத்யாய தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா, தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் ஆகியோர் தலைமையில் பொதுத்துறை நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான அறிக்கை தயார் செய்யப்பட்டது. இந்த அறிக்கை முறையாக வெளியிடப் படவில்லை என்றாலும், சில பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசின் பங்குகளை 49 சதவீதத்துக்கு கீழ் இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பரிந்துரையை பிரதமர் ஏற்க கூடாது. இந்த நிறுவனங் களை மறுசீரமைப்பு செய்வதற்காக நடவடிக்கையில் ஈடுபட வேண் டும். மத்திய அரசின் இந்த நட வடிக்கை இந்த நாட்டை விற்பது போன்றது என்று தொழில் சங்க பொதுச்செயலாளர் தபென் சென் கூறினார். மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களை விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் செப்டம்பர் 2-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
நடப்பு நிதி ஆண்டில் பங்கு விலக்கல் மூலம் ரூ.56,500 கோடி திரட்ட மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.