

இன்டெல் நிறுவனம் இந்தியாவில் ரூ.1,100 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவை விரிவுபடுத்துவதற்காக இந்த முதலீடு செய்யப்படுகிறது.
இதுபோன்ற முதலீடுகள் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல் இந்தியாவின் தகவல் தொழில் நுட்பத் துறையையும் பலப்படுத்தும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இந்த முதலீடு புதுமைகளை ஊக்கப்படுத்துவதோடு மட்டுமல்லா மல், அதிக வாய்ப்புகளையும் உருவாக்கும் என கர்நாடக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங் கார்கே தெரிவித்தார்.
44 ஏக்கரில் அமைந்துள்ள இன் டெல் வளாகத்தில் இந்த முதலீடு மேற்கொள்ளப்படும். 6.20 லட்சம் சதுர அடி அளவில் 9 அடுக்கு புதிய கட்டிடம், ஆய்வுக்கூடம் உள்ளிட் டவை அமைய இருக்கிறது. இந்த புதிய கட்டிடம் 13 மாதங்களில் கட்டி முடிக்கப்படும். அடுத்த 18 மாதங் களில் 3,000 நபர்களுக்கு கூடுதலாக வேலை வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற் கெனவே 7,000 பணியாளர்கள் இன் டெலில் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த 1999-ம் ஆண்டில் இருந்து இந்த நிறுவனம் ரூ.28,000 கோடி முதலீடு செய்திருக்கிறது. இன்டெல் நிறுவனத்தின் வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்தியாவில் பணியாற்ற ஆர்வமாக இருக்கிறோம் என இன்டெல் நிறுவனத்தின் பொது மேலாளர் நிவ்ருதி ராய் தெரிவித்தார்.
மாநில முதலமைச்சர் தலைமை யிலான குழு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி இன்டெல் நிறுவனத்தின் முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கியது.