இன்டர்நெட் இணைப்புள்ள கார்: அலிபாபா குழுமம் அறிமுகம்

இன்டர்நெட் இணைப்புள்ள கார்: அலிபாபா குழுமம் அறிமுகம்
Updated on
1 min read

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா குழுமம் இன்டர்நெட் இணைப்புடைய ஸ்மார்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. வருங்காலத்தில் இந்த காரை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆர்எக்ஸ் 5 என்ற பெயரிலான இந்த காரை எஸ்ஏஐசி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து விதமான அம்சங்களும் இந்தக் காரில் உள்ளதாக அலிபாபா குழுமம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காரில் மேம்பட்ட எரிபொருள் தொழில் நுட்பம் உள்ளது. அதேபோல இதில் மிகச் சிறந்த பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. கிளவுட் நுட்பத்திலான தகவல் அடிப்படையில் இது செயல்படும். இந்தக் காரின் செயல்பாட்டை குரல் வழி மூலம் கட்டுப்படுத்த முடியும்.

இந்தக் காரில் நான்கு கேமிராக்கள் உள்ளன. இதனால் இந்தக் காரில் பயணம் செய்யும்போதே செல்ஃபி படம் எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கேமிரா தேவையில்லாதபோது கழற்றிவிடும் வகையில் உள்ளது. செல்ஃபி படங்களை உடனுக்குடன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியும்.

இண்டர்நெட் தொடர்பு உள்ளதால் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் மூலம் இயக்கலாம். மேலும் தனிப்பட்ட முறையில் வாழ்த்துகள், விரும்பும் இசை மற்றும் போக விரும்பும் இடங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

வருங்காலத்தில் மனிதனின் இன்றியமையாத் தேவைகளில் ஒன்றாக கார் மாறிவிடும். அந்த சமயத்தில் உதவும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் இந்தக் கார் தயாரிக்கப்பட்டுள்ளதாக குழுமத்தின் செயல் தலைவர் ஜாக் மா தெரிவித்துள்ளார்.

இந்தக் கார் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ. 10.07 லட்சம் முதல் ரூ. 18.85 லட்சமாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in