

இந்தியாவின் தங்கத்தின் தேவை குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. 2016-ம் ஆண்டில் தங்கத்தின் தேவை 21 சதவீதம் சரிந்து 676 டன்னாக உள்ளது. உலக தங்க கவுன்சில் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி 2016-ம் ஆண்டில் இந்தியாவில் தங்கத் தின் தேவை 21 சதவீதம் சரிந்து 675.50 டன்னாக உள்ளது.
2016-ம் ஆண்டு தொடக்கத்தில் தங்க நகை விற்பனையாளர்களின் வேலை நிறுத்தம், தங்க நகை வாங்கு வதற்கு பான் கார்டு தேவை மற்றும் பணமதிப்பு நீக்க நட வடிக்கை போன்றவை தங்கத்தின் தேவை குறைய காரணமாக இருந்துள்ளன. 2015-ம் ஆண்டில் தங்கத்தின் தேவை 857.20 டன்னாக இருந்தது என்று உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது.
2016-ம் ஆண்டு தங்கத்தின் தேவை தொடர்ச்சியாக சரிந்து வந்தாலும், நான்காவது காலாண் டில் 3 சதவீதம் அதிகரித்து 244 டன்னாக இருந்தது. தங்கத்தின் விலை சற்றே சரிந்ததும், தீபாவளி மற்றும் திருமண காலமாக இருந்ததாலும் 3 சதவீதம் உயர்ந்தது. தங்க நகை துறை சந்தித்த நெருக்கடிகளும் தங்கத்தின் தேவை குறைவதற்கு காரணமாக இருந்துள்ளன. குறிப் பாக 2 லட்சம் ரூபாய்க்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு அவசியம் என்கிற அறிவிப்பு, தங்க நகை மீதான உற்பத்தி வரி, பண மதிப்பு நீக்கம், தானாக முன்வந்து வருமானத்தை தெரிவிக்கும் திட்டம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் தேவை குறைந்ததாக உலக தங்க கவுன்சில் நிர்வாக இயக்குநர் பி.ஆர்.சோமசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற காரணங்கள் தங்கத்தின் தேவையை மட்டும் பாதிக்கவில்லை, பொதுவான வர்த்தகம் மற்றும் வாங்கும் நடவடிக்கைகளில் சிக்கலை உரு வாக்கியுள்ளன என்று குறிப் பிட்டார். தங்கத்தை மறுசுழற்சி செய் வது 2016-ம் ஆண்டில் 12 சதவீதம் அதிகரித்து 89.6 டன்னாக உள்ளது. இது 2015ம் ஆண்டில் 80.2 டன்னாக இருந்தது. நுகர்வோர் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் 2017-ம் ஆண்டில் வர்த்தகம் சிறப்பாக இருக்கும் என எதிர் பார்ப்பததாகவும் கூறினார்.