வருமான வரித் தாக்கல் படிவத்தில் மாற்றம்: 2 லட்ச ரூபாய் டெபாசிட் செய்திருந்தால் குறிப்பிட வேண்டும்

வருமான வரித் தாக்கல் படிவத்தில் மாற்றம்: 2 லட்ச ரூபாய் டெபாசிட் செய்திருந்தால் குறிப்பிட வேண்டும்
Updated on
1 min read

பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகான 50 நாட்களில் ரூ. 2 லட்ச ரூபாய் டெபாசிட் செய்திருந்தால் வருமான வரித்தாக்கல் படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்று வரு மான வரித்துறை குறிப்பிட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பாக வரு மான வரித்துறை 2017-18 கணக் கீட்டு ஆண்டுக்கான வருமான வரித்தாக்கல் படிவத்தை வெளி யிட்டது. இந்த புதிய படிவத்தில் 2016-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 30-ம் தேதி வரையான காலக்கட்டத்தில் ரூ. 2 லட்சத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்திருந்தால் குறிப்பிட வேண்டும். மேலும் இதே காலக்கட்டத்தில் 2 லட்ச ரூபாய்க்கு மேல் கிரெடிட் கார்டு கட்டணம், கடனை திருப்பி அளித்தது போன்றவை இருந்தால் அதையும் இந்த படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு எவ்வளவு டெபாசிட் செய்யப் பட்டது என்பதை அறிவதற்காக வும், ஆண்டு வருமானத்துடன் ஒப்பிட்டு பார்ப்பதற்காகவும் இந்த புதிய படிவம் வழங்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பாளர்களை கண்டறி யவே வருமான வரித்தாக்கல் படி வத்தில் மாறுதல் செய்யப்பட்டுள் ளது என்று அவர் கூறினார்.

தொகை திருப்பி அளித்தற்கும் அவர்களுடைய வருமானமும் சரியாக இருக்கிறதா என்று பார்க்க இருக்கிறோம். இதன் மூலம் கணக்கில் வராத பணம் மற்றும் கறுப்புப் பணம், கிரெடிட் கார்டு கட்டணங்களுக்கு அல்லது கடனை திருப்பி செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதா என்பதை கண்டறிய முடியும் என்று அவர் கூறினார்.

பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு பழைய 500 மற்றும் 1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள 50 நாட்கள் அவகாசம் அளித்தது. மேலும் கணக்கில் வராத பணத்தை வைத்திருப்பவர்களுக்கு கடைசி வாய்ப்பையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in