

நிறுவனத்தின் நடத்தை விதிமுறைகளை மீறியதால் இன்போசிஸ் பிபிஓ நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஆப்ரகாம் மேத்யூஸ் நீக்கப்பட்டிருக்கிறார். முன்னதாக இன்போசிஸ் பிபிஓ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கவுதம் தாக்கர் தவறுகளுக்கு பொறுப்பேற்று தாமாக பதவி விலகி இருக்கிறார். வரும் நவம்பர் 30-ம் தேதி வரை இவர் சி.இ.ஓவாக தொடருவார்.
ஆப்பிள் நிறுவனத்துக்கு அதிக கட்டணம் விதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த இன்போசிஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், விசாரணை நடந்து வருகிறது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அவர் நீக்கப்பட்டார் என்று தெரிவித்தார். மேலும் விவரங்களை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார். இதே போல ஆப்பிள் நிறுவனமும் எந்த விதமான தகவல்களும் தர மறுத்துவிட்டது.
இன்போசிஸ் பிபிஓ ஆப்பிள் நிறுவனத்துடனான கணக்கு வழக்குகளில் முறைகேடுகள் நடந்திருப்பது உள் கணக்கு தணிக்கையில் தெரியவந்ததாக இந்த விவகாரத்தில் விஷயம் தெரிந்த நபர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த முறைகேடு மிகச் சிறியதாக இருந்தாலும், நிறுவனத்தின் கொள்கை முடிவுகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த முறைகேடு விசாராணை முடிவில் இன்னும் சிலர் நீக்கப்படலாம் என்றும் தெரிகிறது.ராய்ட்டர்ஸ்