Published : 18 Oct 2013 06:01 PM
Last Updated : 18 Oct 2013 06:01 PM

சட்டரீதியான பணம் என்றால் என்ன?

சட்டரீதியான பணம் (Legal Tender)

நாம் பயன்படுத்தும் நாணயங்களுக்கும், ரூபாய் தாள்களுக்கும் உள்ளார்ந்த மதிப்பு இல்லாததால், அவற்றை சட்டரீதியான பணம் என்று ஏற்றுக்கொள்கிறோம். தங்க காசுக்கு உள்ளார்ந்த மதிப்பு உண்டு, ஏனெனில் அந்த உலோகத்திற்கு மதிப்பு உண்டு, ஆனால் நாம் பயன்படுத்தும் பணத்திற்கு உள்ளார்ந்த மதிப்பு இல்லை.

ரூபாய் தாள்களையும், நாணயங்களையும் வெளிடுவதற்கு சட்டங்கள் இருப்பதைப் பார்த்தோம். ஒரு ரூபாய்க்கு குறைவான காசு வில்லைகளை அதிகபட்சம் பத்து ரூபாய் வரை பரிவர்த்தனையில் கொடுக்கலாம். அதாவது, நீங்கள் பத்து ரூபாய்க்கு பொருள் வாங்கினால், அதற்கான காசை ஐம்பது பைசா அல்லது ஒரு ரூபாய் காசு வில்லைகளாக கொடுக்கலாம். அதற்கு மேல் விலையுள்ள பொருட்களை வாங்கும்போது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ரூபாய்க்கான பணத் தாள்களை கொடுக்க வேண்டும். எனவே, ஒரு ரூபாய்க்கும் அதற்கு குறைவான பணத்திற்கு வரையறுக்கப்பட்ட சட்ட பணம் (Limited Legal Tender) என்றும், ஒரு ரூபாய்க்கு மேல் உள்ள பணத்திற்கு வரையறை இல்லாத சட்ட பணம் (Unlimited Legal Tender) என்றும் கூறுவர்.

ஒரு ரூபாயும் அதற்கு குறைவான வில்லைகளை இந்திய அரசும், இரண்டு ரூபாயும் அதற்கு மேற்பட்ட ரூபாய் தாள்களை RBIயையும் வெளியிடுகின்றன.

இரண்டு அல்லது அதற்கு மேல்பட்ட ரூபாய் தாள்களில் ‘I promise to pay the bearer the sum of ... rupees’ (நான் இந்தத் தாளை வைத்திருக்கும் நபருக்கு -- இவ்வளவு ரூபாயைத் தருகிறேன் என்று உறுதியளிக்கிறேன்) என்று எழுதி RBIயின் கவர்னர் கையெழுத்திட்டிருப்பார். அந்த ரூபாய் தாளின் மேல் பகுதியில் ‘இந்திய அரசால் உறுதியளிக்கப்பட்டது’ (Guaranteed by Government of India) என்று எழுதப்பட்டிருக்கும். இதில் ‘I promise to pay the bearer the sum of ... rupees’ என்பது சட்டரீதியான பணம் இது என்றும், இந்தத் தாளை RBIயின் கவர்னர் இடம் கொடுத்தால் அவர் அதனை ஒரு ரூபாய் வில்லை அல்லது தாள்களை கொடுப்பார் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு ரூபாயை இந்திய அரசு வெளியிடுவதால், அதில் இந்திய அரசின் நிதிச் செயலர் கையொப்பம் இட்டிருப்பார். இதன்படி, ஒரு ரூபாய் தாள் என்பது இந்திய அரசின் கடனுக்கு சமமாகும். மற்ற ரூபாய் தாள்கள் எல்லாம் RBIயையின் கடன் என்று அர்த்தம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x