Published : 01 Aug 2016 09:20 AM
Last Updated : 01 Aug 2016 09:20 AM

கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி கடும் சரிவு

நாட்டின் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி 2015- 2016-ம் ஆண்டு கடும் சரிவை சந்தித்துள்ளதாக இந்திய கடல் உணவு ஏற்றுமதி அபிவிருத்தி ஆணையம் தெரிவித்துள்ளது.

2015- 2016-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து 9,45,892 டன் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.30,420.83 கோடி. இது, கடந்த ஆண்டை விட 10.02 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.33,441.61 கோடி மதிப்புள்ள கடல் உணவு பொருட்கள் ஏற்று மதி செய்யப்பட்டிருந்தது.

இறால் ஏற்றுமதி குறைந்ததே ஏற்றுமதி சரிவுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்திய கடல் உணவு ஏற்றுமதியின் மொத்த மதிப்பில் 66 சதவீதம் இறால் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடு களில் இறால் வளர்ப்பு மீண்டும் உயிர்பெற்றுள்ளதால், அங்கு இறால் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உலக சந்தையில் இறால் விலை சரிந்துள்ளது. இறால் விலை சரிவு, சீனாவில் நிலவிய பொருளாதார மந்த நிலை, ஜப்பான் நாட்டின் யென் மதிப்பு சரிவு ஆகிய காரணங்களால் நாட்டின் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி யானது சரிவை கண்டுள்ளதாக இந்திய கடல் உணவு ஏற்றுமதி அபிவிருத்தி ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இறாலுக்கு அடுத்தப்படியாக பதப்படுத்தப்பட்ட மீன் 2,28,749 டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.3,462.25 கோடி. இது கடந்த ஆண்டை விட 26 சதவீதம் குறைந்துள்ளது.

கடல் உணவு பொருட்களை பொறுத்தவரை நாட்டில் உள்ள 30 துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் வழியாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x