

சந்தை மதிப்பு அடிப்படையில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் நான்கு நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.32,394 கோடி உயர்ந்திருக்கிறது.
இதில் ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய இரு நிறுவனங்கள் கடந்த வாரத்தில் அதிக ஏற்றத்தைச் சந்தித்தன.
சந்தை மதிப்பு அடிப்படையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஆனால் கடந்த வார வர்த்தகத்தின் இடையே இருமுறை முதல் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் வெள்ளிக்கிழமை மாலை வர்த்தகத்தின் முடிவில் டிசிஎஸ் முதல் இடத்திலே தொடர்கிறது.
அதேபோல அதிக சந்தை மதிப்பு உள்ள பொதுத்துறை நிறுவ னங்களின் பட்டியலில் முதல் இடத் தைப் பெற எஸ்பிஐ மற்றும் ஓஎன்ஜிசி ஆகிய இரு நிறுவனங் களுக்கு இடையே கடந்த வாரம் போட்டி இருந்தது. ஒட்டு மொத்தமாக கடந்த வார இறுதி யில் முதல் இடத்தில் டிசிஎஸ் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ரிலையன்ஸ், ஹெச்டிஎப்சி வங்கி, ஐடிசி, ஹெச்டிஎப்சி, ஓஎன்ஜிசி, எஸ்பிஐ, இன்ஃபோசிஸ், ஐஓசி மற்றும் ஹெச்யூஎல் ஆகிய நிறுவனங்கள் இருக்கின்றன.
ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ.14,709 கோடி உயர்ந்தது. அதேபோல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மதிப்பு ரூ.11,509 கோடி உயர்ந்தது. ஹெச்டிஎப்சி சந்தை மதிப்பு ரூ.5,131 கோடி உயர்ந்தது. ஐடிசி சந்தை மதிப்பு ரூ.1,044 கோடி உயர்ந்தது.