

விதிமுறைகளை மீறியதற்காக ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு, காப் பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் ரூ.20 லட்சம் அபராதம் விதித்திருக்கிறது.
நிறுவனத்தின் கார்ப்பரேட் முக வர்கள், பணியாளர்கள், ஆகியோர் களை விதிகளுக்கு மீறி வெளிநாடு சுற்றுலா அழைத்து சென்றதற்காக ரூ.15 லட்சமும், சில மார்கெட்டிங் விதிமீறலுக்கு ரூ.5 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.