

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பவன் முன்ஜால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக் காலம் செப்டம்பர் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. மீண்டும் நியமனம் செய்யப்பட்டதால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தலைவராக அவர் தொடர்வார்.
இயக்குநர் குழுவின் இயக்குநராக விக்ரம் கஸ்பெகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நிறுவன செயலராக நீரஜா சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநராக இருந்த பவன் முன்ஜாலின் சகோதரர் சுநீல் காந்த் முன்ஜால் பதவி விலகியதைத் தொடர்ந்து இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.