

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான பிளாக்பெரி இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2014-ம் ஆண்டு மே மாதத்திலிருந்து 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை லிங்க்வாநெக்ஸ்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக துணைத்தலைவராக இருந்தவர்.
2006 முதல் 2009 வரை ஐபிஎம் நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவிற்கு துணைத் தலைவராக இருந்தவர்.
சிஎஸ்சி இந்தியா நிறுவனத்தில் விற்பனை பிரிவின் இயக்குநர் பொறுப்பிலும் இருந்திருக்கிறார்.
தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு மட்டுமல்லாமல் விற்பனை, தொழில் மேம்பாடு, மார்க்கெட்டிங் செயல்பாடுகள் ஆகியவற்றில் மிகச் சிறந்த அனுபவம் கொண்டவர்.
மோட்டோரோலா, பிபிஎல் இந்தியா ஆகிய நிறுவனங்களில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்.
திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் இன்ஜினீயரிங் பட்டமும், பெங்களூரில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் எம்பிஏ பட்டமும் படித்துள்ளார்.