

செல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நோக்கியா நிறுவனம் இப்போது கையடக்கமான டேப் லெட் கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
நோக்கியா பிராண்டை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கில் ஆண்ட்ராய்ட் தளத்தில் இயங்கும் என்1 என்ற டேப்லெட்டை அறிமுகப்படுத்துவதாக நிறுவனத்தின் டேப் லெட் தயாரிப்புப் பிரிவு தலைவர் செபாஸ்டியன் நிஸ்டிரியோம் தெரிவித்தார்.
தாய்வானைச் சேர்ந்த ஃபாக்ஸ் கான் நிறுவன தொழில்நுட்பத்தின் ஒத்துழைப்போடு இது தயாரிக்கப்பட்டுள்ளது. சீனாவில் அடுத்த ஆண்டு நுழைய திட்டமிட்டுள்ளதாக நிஸ்டிரியோம் தெரிவித்தார்.