கட்டிடத் தொழிலாளர்கள் இபிஎப் பெறுவதில் பிரச்சினை: மக்களவையில் அமைச்சர் ஒப்புதல்

கட்டிடத் தொழிலாளர்கள் இபிஎப் பெறுவதில் பிரச்சினை: மக்களவையில் அமைச்சர் ஒப்புதல்
Updated on
1 min read

கட்டுமானத் துறையில் உள்ள ஊழியர்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் தொகையை (இபிஎப்) பெறுவதில் இன்னமும் பிரச்சினை நிலவுகிறது. அவர்கள் அடிக்கடி வெவ்வேறு இடங்களுக்கு வேலை மாறுவதே இதற்குக் காரணம் என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.

மக்களவையில் நேற்று எழுத்துமூலமாக அளித்த பதிலில் அவர் கூறியிருப்பதாவது: கட்டிடத் தொழிலளர்கள் அடிக்கடி பணி மாறுவதால் அவர்களிடம் இதற்குரிய தொகையை வசூலிக்க முடியவில்லை. மாற்றத்தக்க எண் அளிப்பது உள்ளிட்ட வசதி கள் செய்து தந்தாலும் இதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முன்வருவதில்லை என்றார்.

கடந்த நிதி ஆண்டில் (2013-14) ரூ.27,448 கோடி தொகை செயல்படுத்தப்படாத தொகையாக பிஎப் கணக்கில் உள்ளதாக அவர் கூறினார். பிஎப் தொகையில் தொடர்ந்து 36 மாதங்கள் பணம் செலுத்தப்படவில்லை என்றால் அது செயல்படுத்தப்படாத கணக் காகக் கருதப்படும்.

தேசிய கண்ணாடியிழை கேபிள் ஒருங்கிணைப்பு தாமதம்

அரசின் பிரதான திட்டமான தேசிய கண்ணாடியிழை கேபிள் ஒருங்கிணைப்பு (என்ஓஎப்என்) திட்டம் போதுமான அளவுக்கு மூலப் பொருள் கிடைக்காததாலும், போதிய எண்ணிக்கையிலான ஊழியர்கள் உரிய நேரத்தில் கிடைக்காததாலும் கால தாமதமாகிறது என்று மத்திய தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

2.50 லட்சம் கிராம பஞ்சாயத் துக்களை 2017-ம் ஆண்டுக்குள் இணைக்க திட்ட மிட்டுள்ளது. இதற்கான திட்ட மதிப்பு ரூ. 20,100 கோடியாகும். பிஎஸ்என்எல், ரெயில்டெல், பவர் கிரிட் கார்ப் பரேஷன் மூலம் 2,972 வட்டங்கள் கணக்கெடுக்கப் பட்டுள்ளன. மொத்தம் 3,018 வட்டங்கள் உள்ளன. இதன் மூலம் 50 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இணைக்க திட்டமிட்டுள்ளாக அவர் குறிப்பிட்டார்.

சீனாவை சார்ந்திருக்கும் மருந்துத் துறை

மருந்துப் பொருள்களுக்கான மூலப் பொருள்களுக்கு சீனா வை பெரிதும் சார்ந்திருக்க வேண்டி யுள்ளதாக மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார் தெரிவித்தார். மக்களவையில் எழுத்து மூலமாக அளித்த பதிலில் இத் தகவலைத் தெரிவித்தார். அத்தியாவசியமான மருந்துப் பொருள் பட்டியலில் உள்ள 12 மருந்துகளுக்கான மூலப் பொருள்கள் சீனாவிலிருந்து இறக்குமதியாவதாக அவர் குறிப்பிட்டார்.

பாரசிடமால், மெட்பார்மின், ரானிடி டைன், சிப்ரோ புளோக்சின், செப்ளாக்சின், அப்ளோக்ஸாசின், இபுபுரூபென், மெட்ரோனிடஸோல், ஆம்பிசிலி உள்ளிட்ட மருந்துகளுக்கான மூலப் பொருள்கள் சீனாவிலிருந்து இறக்குமதியாவதாக அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in