

ஓலா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி(சிஎப்ஓ) ராஜிவ் பன்சால் மற்றும் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ரகுவேஷ் சரப் ஆகியோர் ராஜினாமா செய்திருக்கின்றனர்.
நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் ஓலா மணியின் தலைவர் பல்லவ் சிங், தற்காலிக தலைமை நிதி அதிகாரியாக இருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ரகுவேஷ் சரப்புக்கு மாற்றாக தலைமை மார்கெட்டிங் அதிகாரி இன்னும் நியமனம் செய்யப்படவில்லை.
இது குறித்து ஓலா நிறுவனத் துக்கு அனுப்பப்பட்ட கேள்வி களுக்கு பதில் கிடைக்கவில்லை. இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்த ராஜிவ் பன்சால் ஒருவருடத்துக்கு முன்பு ஓலாவில் இணைந்தார். அவர் வெளியேறிய தற்காக இன்போசிஸ் நிறுவனம் வழங்கிய நிதி சமீபத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இது குறித்து இன்போசிஸ் நிறுவனர்கள் கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஓலா நிறுவனத்துக்கு தேவை யான நிதியை திரட்ட முடியாத தால் பன்சால் ராஜினாமா செய் திருப்பதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன.
மைக்ரோசாப்ட் இந்தியாவில் பணியாற்றியவர் சரப். கடந்த வருடம் ஜனவரியில் ஓலாவில் இணைந்தார். இந்த நிலைமையில் ஓலா நிறுவனத்தின் தகவல் பிரிவு தலைவராக பத்ரி ராகவன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
சாப்ட்பேங்குக்கு நஷ்டம்
ஜப்பானைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான சாப்ட்பேங்க், இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக ஓலா மற்றும் ஸ்நாப்டீலில் முதலீடு செய்துள்ளது. டிசம்பருடன் முடிவடைந்த 9 மாதங்களில் 35 கோடி டாலர் அளவுக்கு இந்திய முதலீடுகளால் நஷ்டம் அடைந்திருப்பதாக இந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.