

பெரும்பாலும் வாராக் கடன் திரும் பாது என்று தெரிந்தே வங்கிகள் கடன் வழங்கி இருக்கின்றன. மேலும் மோசடியான முறைகள் மூலம் இந்தக் கடன்கள் வழங்கப் பட்டுள்ளன என்று மத்திய தலை மைக் கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) சசி காந்த் ஷர்மா தெரிவித் துள்ளார்.
பைனான்ஷியல் மற்றும் கார்ப்ப ரேட் மோசடிகள் குறித்து அசோசேம் நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற சசி காந்த் ஷர்மா மேலும் கூறிய தாவது: வங்கிகள் வழங்கியுள்ள பெரும்பாலான கடன்கள் முறை கேடான முறையில் வழங்கப்பட் டுள்ளன. இதில் பெருமளவு தொகை நிச்சயம் திரும்பப் பெற முடியாது. ஏனெனில் இவற்றில் பெருமளவு தொகை வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு விட்டது.
சமீப காலமாக நிறுவனங் களுக்கு எதிரான மோசடிகள் அதி கரித்து விட்டன. அதேபோல பொதுத் துறை வங்கிகளிலும் மோசடிகள் அதிகரித்துவிட்டன. வங்கிகளில் நடைபெறும் மோசடிகள் பெரும் பாலும் தொழில்நுட்ப அசிரத்தை யால் நிகழ்கின்றன. பொதுத்துறை வங்கிகளில் அதிக மோசடிகள் நடைபெறுவதால் அவை பெறும் சிரமத்திற்கு ஆளாகின்றன. வங்கி மோசடிகளை ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடனும் தொழில்நுட்ப கோளாறுகளுடனும் இணைத்துப் பார்க்க வேண்டும். சிட்பண்ட் நிறுவனங்களை மாநில அரசுகள் ஒழுங்குப்படுத்த வேண்டும். வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் மீது மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். ஏனெனில் இது போன்ற நிதி நிறுவனங்களில் எளிதாக மோசடிகள் நடைபெறும். இவ்வாறு சசி காந்த் ஷர்மா தெரிவித்தார்.
வாராக்கடன் சுமையால் 2015-16ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் பத்து பொதுத்துறை வங்கிகள் 15,000 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தன. ஆனால் பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த வருடம் 12,000 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. ஆனால் அந்த வங்கி கடனுக்கு ஒதுக்கீடு செய்ததால் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
சமீபத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, திவால் சட்டமும், கடன் மீட்பு சட்டமும் வங்கிகளின் கடன் சுமையை தீர்ப்பதற்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பொதுத் துறை வங்கிகளின் நிதி ஆதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு 25,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. பட்ஜெட்டில் குறிப்பிட்டபடி வங்கிகளுக்கான ஒதுக்கீடு நிச்சயம் மேற்கொள்ளப்படும் என ஜேட்லி உத்தரவாதம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.