

போயிங் நிறுவனத்திடமிருந்து 42 விமானங்களை வாங்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் புதன்கிழமை இரு நிறுவனங்களுக்கிடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந் தத்தின் மதிப்பு ரூ. 26 ஆயிரம் கோடி (440 கோடி டாலர்) ஆகும். ஹைதராபாதில் புதன்கிழமை தொடங்கிய இந்தியா ஏவியே ஷன் 2014 கண்காட்சி, மாநாட் டில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி போயிங் நிறுவனம் முதலாவது 737-8 பிஎம்எக்ஸ் ரக விமானத்தை 2018-ம் ஆண்டு ஸ்பைஸ்ட் ஜெட் நிறுவனத்துக்கு வழங்கும் என்று போயிங் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத் துக்கான மூத்த துணைத் தலைவர் தினேஷ் கேஸ்கர் கூறினார்.
இரு நிறுவனங்களுக்கிடை யிலான ஒப்பந்தத்தில் கேஸ்கர் மற்றும் சன் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி எஸ்.எல். நாராயணன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதற்கான நிகழ்ச்சியில் மத்திய சிவில் விமான போக்கு வரத்துத்துறை அமைச்சர் அஜீத் சிங்கும் இருந்தார். புதிய ரக விமானத்தை 2017-ம் ஆண்டு சௌத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறு வனத்துக்காக போயிங் நிறுவனம் வழங்க உள்ளது.
புதிய ரக போயிங் விமானம் ஏற்கெனவே உள்ள விமானங்ளைக் காட்டிலும் எரிபொருள் சிக்கன மானது. போயிங் விமானத்தின் இறக்கைகள் பெரியதாக இருக்கும். அத்துடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட என்ஜின் இருக்கும். போயிங் நிறுவனம் சுற்றுச்சூழலை பாதிக்காத, குறைந்த அளவில் கரியமில வாயுவை வெளியிடும் விமானங் களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருவதாக கேஸ்கர் குறிப்பிட்டார்.
போயிங் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை விமானங்களை வாங்குவதில் தங்கள் நிறுவனம் மிகுந்த பெருமையடைவதாக நாராயணன் தெரிவித்தார். புதிதாக 42 விமானங்களை வாங்குவதன் மூலம் போயிங் நிறுவனத் திடம் இதுவரை மொத்தம் 90 விமானங்களை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வாங்க உள்ளது. 31 போயிங் விமானங்களை ஸ்பைஸ் ஜெட் பயன்படுத்தி வருகிறது.
737 மேக்ஸ் ரக போயிங் விமானங்களுக்கு இதுவரை 1,800 ஆர்டர்கள் வந்துள்ளன. எரிபொருள் சிக்கனமான இந்த ரக விமானங்கள், குறைந்த கட்டணத்தில் விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கு மிகவும் ஏற்றதாகும். போயிங் நிறுவனம் மேக்ஸ் 7, மேக்ஸ் 8 மற்றும் மேக்ஸ் 9 ரக விமானங்களைத் தயாரிக்கிறது. இந்த விமானங்கள் அனைத்தும் ஒரே விதமான சிறப்பம்சங்களைக் கொண்டது. இவை அனைத்தும் குறைவான நிர்வாகச் செலவில் இயங்குபவை என்று கேஸ்கர் குறிப்பிட்டார்.