

நிரந்தர கணக்கு எண் (பான்) மற்றும் நிறுவனங்களுக்கான `டான்’ எண்களை ஒரே நாளில் பெற முடியும். மின்னணு மூலமான விண்ணப்பங்களை பதிவு செய்த 24 மணி நேரத்தில் அனுமதி அளிக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
தனி நபர்கள் ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு நிரந்தரக் கணக்கு எண் (பான்) கார்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
நிறுவனங்கள் வரி பிடித்தம் மற்றும் செலுத்துவதற்காக அளிக்கப்படும் (டான்) எண்களை விரைவாக அளிப்பதற்காக நிறுவ னங்களின் டிஜிட்டல் கையெழுத்து உள்ளிட்டவற்றை சரிபார்க்கும் வசதியை பான் கார்டுகள் வழங் கும் என்எஸ்டிஎல் மற்றும் இ கவர் னன்ஸ் சார்ந்த நிறுவனங் களுக்கு அளித்துள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒரே நாளில் விநியோகம்
புதிய நடைமுறையின்படி ஆன் லைன் மூலம் விண்ணப்பித்த ஒரே நாளில் அனைத்து தகவல்களும் சரி யாக இருந்தால் அட்டை அளிக்கப் படும் என வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனி நபர்களுக்காக ஆதார் அட்டை அடிப்படையிலான கை யெழுத்தை ஆதாரமாகக் கொண்டு விண்ணபிப்பவர்களுக்கு அந்த கையெழுத்து பிரதியை சரி பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள் ளது. இந்த வசதி என்எஸ்டிஎல் இ கவர்னன்ஸ் தளத்துக்கு வழங்கப் பட்டுள்ளது. இதன் மூலம் காகித விண்ணப்பங்கள் குறையும். அத்துடன் ஆதார் அடிப்படையி லான பான் கார்டு மூலம் ஏற்படும் குழப்பங்கள் தவிர்க்கப்படும். ஒருவருக்கு இரண்டு அட்டைகள் அளிப்பதும் தவிர்க்கப்படும் என்று வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்விதம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான இணைய தள முகவரிகளை வருமான வரித்துறை இணையதளத்தி லிருந்து பெறலாம்.
இணையதள முகவரி: >incometaxindia.gov.in