பொது பொருள்கள் - என்றால் என்ன?

பொது பொருள்கள் - என்றால் என்ன?
Updated on
1 min read

அரசு எல்லோருக்கும் பயனளிக்கக்கூடிய பொது பொருள்களை வழங்க பொது செலவுகளை செய்யும் என்று நேற்று பார்த்தோம். பொது பொருள்கள் (Public Goods) என்றால் என்ன என்பது பற்றி இன்று பார்ப்போம்.

தனியார் துறை மக்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் உற்பத்தி செய்து வழங்க இயலாது. உதாரணமாக, தேசிய பாதுகாப்பு, பாதுகாப்பான குடிநீர், சாலை வசதி, பொது நிர்வாகம், நீதிமன்றம், காவல் துறை போன்றவை எல்லோருக்கும் பயனளிக்கக்கூடிய பொது பொருள்கள் ஆகும். இப்பொருள்களை வழங்க முற்படும்போது, அதற்கான விலையை தனித்தனியாக ஒவ்வொருவரிடமும் வசூல் செய்து, லாபம் ஈட்ட இயலாதென்பதால் இதுபோன்ற பொருள்களை வழங்க தனியார் துறை முன்வராது. இதுபோன்ற சுழல் சந்தையின் தோல்வி (Market Failure) என்று பொருளியலில் அழைக்கப்படுகிறது.

பொது பொருள்களையும் தனியாரின் பொருள்களையும் இரண்டு அம்சங்களின் அடிப்படையில் வரையறை செய்யலாம்.

1. சேர்வதற்கல்லாதது (Non Excludable): செய்தித்தாள் ஒரு பொருளின் விலையைக் கொடுக்க முடியாதவர்களை அப்பொருளின் நுகர்விலிருந்து விளக்கி வைக்க முடியும். எனவே, விலையைக் கொடுக்காதவர்கள் அதனை வாங்க முடியாது, அச்சந்தையிலிருந்து அவர்கள் விளக்கி வைக்கப்படுவர். இது பொது பொருள் சந்தையில் சாத்தியமில்லை. இங்கு விலை கொடுக்காதவர்களை சந்தையிலிருந்து விலக்கி வைக்கமுடியது. நான் அரசுக்கு வரி செலுத்தவில்லை என்பதால் எனக்கு பாதுகாப்பு கொடுக்கமுடியாது என்று தள்ளிவைக்க முடியாது.

2. போட்டியற்றது (Non Rival): பொது பொருட்களின் நலன்களை எல்லோரும் ஒரே அளவில், ஒரே நேரத்தில் அனுபவிக்க முடியும். பொது பொருள் உற்பத்தியாகும் போதே அதன் நுகர்வும் துவங்கும். எனவே, ஒருவர் நுகர மற்றவர்களும் அதனை அதே நேரத்தில் நுகர முடியும். ஒரு சாலையை போட்ட பிறகு நாம் அனைவரும் அதைப் பயன்படுத்த முடியும், இது தான் போட்டியற்ற நுகர்வு. தனியார் பொருளுக்கு இது பொருந்தாது. நான் இந்த செய்தித்தாளை வாசிக்கும்போது நீங்களும் அதே நேரத்தில் அதனை வசிக்க முடியாது. தனியார் பொருளுக்கு போட்டி நுகர்வு உண்டு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in