காற்றாலை மின்னுற்பத்தி கொள்முதல் விலை குறைந்தால் தொழில் பாதிக்கப்படும்: சுஸ்லான் குழுமத் தலைவர் கருத்து

காற்றாலை மின்னுற்பத்தி கொள்முதல் விலை குறைந்தால் தொழில் பாதிக்கப்படும்: சுஸ்லான் குழுமத் தலைவர் கருத்து
Updated on
1 min read

மரபு சாரா எரிசக்திகளான காற் றாலை மின்னுற்பத்தி, சூரிய ஆற் றல் மின்னுற்பத்தி மூலம் பெறப் படும் மின்சாரத்துக்கான கொள் முதல் விலை குறைந்தால் இத் தொழிலின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும் என்று சுஸ்லான் குழுமத்தலைவர் துளசி தாந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இத்தகைய சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத மின்சார உற்பத்தி மூலம் பெறப்படும் மின்சாரத்துக் கான கொள்முதல் விலை யூனிட் ஒன்றுக்கு ரூ.5-க்கும் கீழாக குறையும்போது இவற்றின் செயல் பாடு பாதிக்கப்படும்.

இதனாலேயே இத்தகைய மின்னுற்பத்தித் திட்டங்களுக்கு கடன் வழங்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தயங்குகின்றன. யூனிட் கொள்முதல் விலை குறையும்போது வாங்கியக் கடனைத் திரும்ப செலுத்துவதில் கால தாமதம் ஏற்படும் என்ற தயக்கமே இதற்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொள்முதல் விலை யூனிட் ஒன் றுக்கு ரூ.5 ஆக இருக்கும் பட்சத்தில் முதலீட்டிலிருந்து பெறப்படும் வருமானம் 14 சதவீதமாக இருக்கும். இது குறையும்போது இத்தகைய மின்னுற்பத்தி திட்டங்களில் இறங்க பலர் தயங்குவர் என்று அவர் கூறினார்.

காற்றாலை மின்னுற்பத்திக்குத் தேவையான ரோட்டர் பிளேடுகளை சுஸ்லான் தயாரிக்கிறது. பூஜ் பகுதியில் ஆலை உள்ள போதிலும் சில பகுதிகளில் இந்நிறுவன வாடிக் கையாளர்களுக்காக காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை இந்நிறுவனம் நிர்வகிக்கிறது.

இந்தியாவில் மின்னுற்பத்தி திட்டங்களுக்கான எதிர்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது. அரசு 2022-ம் ஆண்டில் 175 ஜிகா வாட் மின்னுற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இவற்றில் 60 ஜிகாவாட் மின்சாரம் காற்றாலை மூலம் பெற இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவில் இத்துறை வளர்ச்சி 30 சதவீத அளவுக்கு உள்ளது. பெருகிவரும் மின் தேவையை பூர்த்தி செய்யவும், இலக்கை எட்ட வும் இத்தொழிலில் புதிய தொழில் நுட்பம் புகுத்த வேண்டியது அவசி யமாகும். அப்போதுதான் குறைந்த மின் கொள்முதல் கட்டணத்தை சமாளிக்க முடியும். அதேசமயம் சந்தை நிலவரத்துக்கேற்ற விலை யில் மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

புணேயைத் தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் இந் நிறுவனத் தயாரிப்பு மூலம் 17 நாடு களில் 15.5 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் இந்தியாவில் தயாராகும் காற்றாலை மின்சாரத்தின் பங்களிப்பு 9.5 ஜிகாவாட் டாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in