ஜூலை 1 முதல் ஜிஎஸ்டியை அமல்படுத்த அனைத்து மாநிலங்களும் ஒப்புதல்

ஜூலை 1 முதல் ஜிஎஸ்டியை அமல்படுத்த அனைத்து மாநிலங்களும் ஒப்புதல்
Updated on
1 min read

ஜூலை 1ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தை அமல்படுத்துவதை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 15 வது கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் இதனைத் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி சட்டத்தின்படி, தங்கம் உள்ளிட்ட ஆறு பொருட்களுக்கான வரி விகிதங்களை இறுதி செய்வ தற்காக கவுன்சிலின் 15 வது கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஐசக் மதியத்துக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்தார். தங்கம், ஜவுளி, காலணி, பிஸ்கட்ஸ், மற்றும் பீடி உள்ளிட்ட ஆறு பொருட்களின் வரி விகிதங்கள் முடிவு செய்வதற்காக கூட்டம் கூடியது. கடந்த மாதத்தில் நகரில் கூடிய கூட்டத்தில் 1,211 பொட்ருட்களுக்கான வரி விகிதங்கள் முடிவு செய்யப்பட்டன. அனைத்து மாநிலங்களும் தங்களது மாநிலத்தில் ஜிஎஸ்டி சட்டத்தை ஜூலை 1-ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு கொண்டு வரத் தயாராக உள்ளன.

ஆனால் கடந்த வாரத்தில் மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா, ஜிஎஸ்டியில் மேலும் சந்தேகங்கள் உள்ளன. இதனால் ஜூலை 1-ம் தேதியன்று ஜிஎஸ்டியை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று கூறியிருந் தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் உடனடியாக அமல்படுத்துவது சாத்தியமில்லை என அறிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்றைய கூட்டத்தில் அமித் மித்ராவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டியை அமல்படுத்தும் தேதியில் எந்த மாற்றமுமில்லை என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கடந்த வியாழக்கிழமை கூறியிருந்தார். கடந்த மாதம் நகரில் நடைபெற்ற கூட்டத்தி லேயே கிட்டத்தட்ட அனைத்து மாநில அமைச்சர்களும் ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டியை அமல்படுத்த தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

புதுடெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் 15 வது கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in