Last Updated : 18 Aug, 2016 10:10 AM

 

Published : 18 Aug 2016 10:10 AM
Last Updated : 18 Aug 2016 10:10 AM

ஆதார் மூலம் சிம்கார்டு: உடனடி இணைப்பு

புதிய சிம்கார்டு வாங்குவதற்கான நடைமுறைகளில் புதிய முறைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி ஆதார் அடை யாள அட்டை அடிப்படையில் இணையதளம் மூலமாகவே புது சிம்கார்டுக்கான ஆக்டிவேஷன் முறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புது சிம்கார்டுக்கான விண்ணப்பம் செய்வதும் சரிபார்ப்பு வேலைகளும் எளிதாகிறது. காகிதங்களும் செலவிடத் தேவையில்லா நிலை உருவாகிறது.

ப்ரீ-பெய்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் இணைப்புகள் வாங்க ஆதார் அட்டை மற்றும் கைவிரல் ரேகை இரண்டையும் சம்பந்தப்பட்ட சிம்கார்டு விற்பனையாளரிடம் கொடுத்தால் போதும்.

மத்திய அரசு இது தொடர்பாக இ-கேஒய்சி வழிகாட்டுதல்களை நேற்று அறிவித்துள்ளது. இதன் மூலம் இணையதளம் மூலமான விண்ணப்பம், அதன் நம்பகத்தன்மையை சோதிப்பது உள்ளிட்ட வேலைகள் எளிமையாகவும் வேகமாகவும் தகவல் தொடர்பு நிறுவனங்கள் மேற்கொள்ள முடியும்.

இதற்கு முன் இருந்துவரும் ஆவணங்கள் அடிப்படையிலான நடைமுறையில் இருந்து இது முற்றிலும் வேறுபடுகிறது. முக்கியமாக சிம்கார்டு செயல் பாட்டுக்கான நேரம் குறைகிறது. கேஒய்சி பரிசோதனைகளும் உடனடியாக நடந்துவிடுகிறது.

இ-கேஒய்சி முறையில் வாடிக்கையாளர்கள் ஆதார் எண் மற்றும் பயோ மெட்ரிக் அடிப்படையில் இணையதளம் மூலமாக சரிபார்த்துக் கொள்ள முடியும். வாடிக்கையாளரின் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் மற்றும் டிஜிட்டல் முறையில் கைழுத்திடப்பட்ட புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை ஆதார் எண் வழங்கும் யுஐடிஏஐ மூலம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

டிஜிட்டல் கையெழுத்து முறையிலான கேஒய்சி விவரங் களை யுஐடிஏஐ வழங்கும். புது சிம்கார்டு வழங்குவதற்காக வாடிக் கையாளர்கள் குறித்த விவரங்களை நேரடியாக கடைகளுக்கு அனுமதி அளிப்பதற்கான வாய்ப்புகள் சாத்தியமாகியுள்ளது என தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களில் கூட்டமைப்பின் தலைவர் ராஜன் மேத்திவ்ஸ், நடைமுறைகளை எளிமைப் படுத்துவது நிறுவனங்களுக்கு மிகவும் பயனளிப்பதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் சரிபார்ப்பு முறைகளுக்கான நடைமுறை பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் உள்ளது என்று குறிப்பிட் டுள்ளார்.

முன்னதாக எல்லா பரிசோதனை நடைமுறைகளுக்கும் அதிகபட்சம் 8 முதல் 10 மணி நேரம் வரை ஆனது. அது தற்போது குறைந்துவிடும் என்றும் குறிப்பிட்டார்.

பார்தி ஏர்டெல் நிறுவனம் ஆதார் அடிப்படையிலான - கேஒய்சி நடைமுறையை இந்த வாரமே நடைமுறைக்கு கொண்டுவர உள்ளதாக நிறுவனத்தின் இந்திய மற்றும் தெற்காசிய நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான கோபால் விட்டல் குறிப்பிட்டுள்ளார்.

தொலைத்தொடர்பு நிறுவனங் களில் பரிசோதனை நடைமுறை களில் பாதுகாப்பு ஏற்படுத்தி யுள்ளதோடு அனைத்து நிறுவனங் களுக்கும் இது பயனளிக்கும் என்று வோடபோன் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x