

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில ரக கண்ணாடிகளுக்கு பொருள் குவிப்பு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்களைக் காக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்படி ஒரு டன்னுக்கு 136 டாலர் பொருள் குவிப்பு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் போரோசில் லிமிடெட் நிறுவனம் இது தொடர்பாக பொருள் குவிப்பு மற்றும் வரி விதிப்பு இயக்குநரகத்துக்கு (டிஜிஏடி) புகார் அனுப்பியிருந்தது. வர்த்தக அமைச்சகத்துடன் இது குறித்து ஆய்வு செய்த டிஜிஏடி பொருள் குவிப்பு வரி விதிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி கண்ணாடியின் தன்மைக்கேற்ப டன்னுக்கு 52 டாலர் முதல் 136 டாலர் வரை வரி விதிக்கப் படும்.
பாலுக்கு தடை
இதனிடையே சீனாவிலிருந்து பால் பொருள் மற்றும் சாக்லெட் சார்ந்த பொருள் இறக்குமதிக்கு மத்திய அரசு மேலும் ஓராண்டுக்கு தடையை நீட்டித்துள்ளது. இதனால் 2018 ஜூன் வரை தடை நீடிக்கும்.