ரூ.339 க்கு தினசரி 2 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் புதிய சலுகை

ரூ.339 க்கு தினசரி 2 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் புதிய சலுகை
Updated on
1 min read

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் புதிய சலுகைத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி ரூ.339க்கு தினசரி 2 ஜிபி 3ஜி டேட்டா, பிஎஸ்என்எல் எண்களுக்குள் எல்லையில்லா அழைப்பு வசதியை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

ரூ.339-க்கு, 28 நாட்களுக்கு பிஎஸ்என்எல் நெட்வொர்க் எண்களுக்குள் அளவில்லாமல் பேசிக்கொள்ளலாம். மேலும் தினசரி 2 ஜிபி 3ஜி டேட்டாவினை பயன்படுத்தலாம். “ஸ்பெசல் டாரிப் வவுச்சர்’’ என்கிற காம்போ ஆபரில் இந்த சலுகை 90 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ தற்போது தினசரி 1 ஜிபி 4 ஜி டேட்டாவினை தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. மேலும் ஜியோ நெட்வொர்க்கிற்குள் இலவச அழைப்பு வசதியையும் அளிக்கிறது. ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு ஜியோ பிரைம் சேவையில் வாடிக்கையாளர்கள் ரூ.99க்கு பதிவு செய்து கொண்டால் 303 ரூபாய்க்கு எல்லையில்லா டேட்டா மற்றும் அழைப்பு வசதியை பெறலாம் என அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தொலைத் தொடர்பு வட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா சிறப்பான சலுகை என்று பிஎஸ்என்எல் குறிப்பிட்டுள்ளது.

தொலைத் தொடர்பு துறையின் தற்போதைய போக்கை புரிந்துகொண்டு எங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளோம் என்று பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கன்ஸ்யூமர் மொபிலிட்டி இயக்குநர் ஆர் கே மிட்டல் கூறியுள்ளார்.

புதிய திட்டத்தில் இதர நெட்வொர்க் எண்களுக்கு தினசரி 25 நிமிடங்களுக்கு இலவச அழைப்பு வசதியும், அதன்பிறகு 1 நிமிடத்துக்கு மேற்பட்ட அழைப்புக்கு 25 பைசா என்கிற கட்டணச் சலுகையும் அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in