

அமெரிக்கா மற்றும் சீன தைபேயிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பினாலுக்கு மத்திய அரசு பொருள் குவிப்பு வரி விதித்துள்ளது. உள்நாட்டில் பினால் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப் பட்டுள்ளது. ஒரு டன்னுக்கு 46 டாலர் முதல் 196 டாலர் வரை ஐந்து ஆண்டுகளுக்கு விதிக்கப்படுவதாக மத்திய உற்பத்தி வரி மற்றும் சுங்க வரி விதிப்பு வாரியம் (சிபிஇசி) தெரிவித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து அதிக அளவில் பினால் இறக்குமதியானால் அது உள்நாட்டு உற்பத்தி யாளர்களை கடுமையாக பாதிக்கும். பொதுவாக மருத்துவத்துறையில் கிருமிநாசினியாகவும் தொழிற் சாலைகளில் பெயிண்ட் தயாரிப்பிலும், அழகு சாதன பொருள் உற்பத்தியிலும் பீனால் பயன்படுத் தப்படுகிறது.