

இந்தியாவில் 41 சதவீத பெற்றோர் கள் தங்களின் ஓய்வு காலத்துக்கு சேமிப்பதைவிட குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு சேமிப்பதை முக்கியமாக கருதுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது
எதிர்கால கல்வி குறித்து ``வேல்யூ ஆப் எஜூகேஷன் பவுண்டேஷன்’’ என்கிற ஆய்வை ஹெச்எஸ்பிசி நிறுவனம் சமீபத்தில் நடத்தியுள்ளது. இதில் 71 சதவீத இந்திய பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் கல்லூரி, பல்கலைக்கழக கல்வி செலவுகளுக்காக கடன் வாங்க தயாராக இருக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது. தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்க வைக்க விரும்பும் பெற்றோர்களின் சதவீதம் 76 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் அந்த ஆய்வு கூறியுள்ளது.
இந்த ஆய்வில் இந்திய பெற்றோர்கள் தங்களது ஓய்வு காலத்துக்கு சேமிப்பதைவிடவும் முக்கியமாக குழந்தைகளில் கல்விக்காக செலவு செய்வதை கருதுகின்றனர். ஆய்வில் கலந்து கொண்ட பெற்றோர்களில் சுமார் 41 சதவீத இந்திய பெற்றோர்கள் இப்படி கருதுகின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக 65 சதவீத பெற்றோர் கள் இதர நிதித்தேவைகளை விடவும் பிள்ளைகளில் கல்வி செலவுகளை சமாளிப்பது மிகுந்த கடினமாக உள்ளதாக கூறியுள்ளனர். இந்திய பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வி செலவுகளுக்காக, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் ஆண் டுக்கு சராசரியாக 2,05,000 ரூபாய் செலவிடுகின்றனர்.
இந்திய பெற்றோர்களின் நிதித் பொறுப்புகளில் மிகப் பெரிய சுமையாக பிள்ளைகளின் கல்விச் செலவுகள் அழுத்துவதாக ஹெச்எஸ்பிசி ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் 70% பெற் றோர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வி செலவுகளுக்கான தினசரி சேமிப்பதையும், கடன் வாங்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இந்த ஆய்வு தொடர்பாக பேசிய ஹெச்எஸ்பிசி இந்தியா நிறுவனத்தின் சில்லரை வர்த்தக வங்கி மற்றும் வெல்த் மேனேஜ்மெண்ட் தலைவர் எஸ். ராமகிருஷ்ணன் கூறியபோது,
இந்தியப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வி இலட்சியங்களுக்காகவும், இலக்குகளுக்காகவும் கடன் வாங்கவும், எந்த கேள்விகளும் இல்லாமல் உதவவும் தயாராக உள்ளனர். நிதித் தியாகங்களை செய்கின்றனர் என்று குறிப்பிட்டார். எனினும் பெற்றோர்கள் நிதி சார்ந்த முதலீடுகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
இது தங்களது ஓய்வு காலத்துக்காக இல்லையென்றாலும், தங்களது சொந்த எதிர்காலத்துக்கு அவசியமாகும் என்றும் கூறினார். குடும்பத்தின் மொத்த நன்மைக்காக தங்களது நிதித் திட்டங்களை தொடர்ச்சியாக மீளாய்வு செய்ய வேண்டும். தங்களது பிள்ளைகள் நல்ல இடத்துக்கு வளர்வதற்கு உதவும் அதே வேளையில் தங்களது நீண்ட கால நிதி இலக்குகளிலும் சமரசம் செய்து கொள்ள கூடாது என்றும் குறிப்பிட்டார்.