

சன் பார்மா நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 4.72 சதவீதம் சரிந்து ரூ.1,471 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,544 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.7,122 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.7,912 கோடியாக உயர்ந் திருக்கிறது.
அமெரிக்காவில் விற்பனை 4 சதவீதம் அளவுக்கு உயர்ந் திருக்கிறது. மொத்த விற்பனையில் அமெரிக்காவில் 45 சதவீதம் உள்ளது.
நிறுவனத்தின் கூடுதல் இயக்குநராக கல்யாண சுந்தரம் சுப்ரமணியன் நியமனம் செய்யப் பட்டிருக்கிறார். வரும் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 13 வரை இந்த பொறுப்பில் அவர் இருப்பார். நேற்றைய வர்த்தகத்தில் 0.82 சதவீதம் சரிந்து 649.30 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.