

அதிக பணக்காரர்கள் வாழும் நாடுகள் பட்டியலில் இந்தியா 12-வது இடத்தை பிடித்துள்ளது. தற்போது 2 லட்சம் பணக்காரர்கள் இந்தியாவில் வசிக்கின்றனர் என்று கேப் ஜெமினி ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு கேப்ஜெமினி வெளியிட்டிருந்த ஆய்வில் இந்தியா 11 வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் 1.98 லட்சம் பேர் இந்தியாவில் அதிக பணக்காரர்களாக இருந்தனர். இந்த வருடம் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, 2025ம் ஆண்டிற்குள் அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள் இந்தியாவில் அதிகம் இருப்பார்கள் என 13 சதவீத சர்வதேச வெல்த் மேனேஜர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பட்டியலில், வட அமெரிக்காவை விட ஆசிய பசிபிக் பகுதி முன்னணியில் வந்திருப்பது இதுவே முதல் முறை. 2015-ம் ஆண்டில் ஆசிய பசிபிக் பிராந் தியம் 17.4 டிரில்லியன் டாலர் சொத்து மதிப்பை கொண்டுள்ளது.