Published : 15 Sep 2016 11:04 AM
Last Updated : 15 Sep 2016 11:04 AM

மான்சான்டோவை வாங்குகிறது பேயர்

அமெரிக்காவை சேர்ந்த மான் சான்டோ நிறுவனத்தை ஜெர்மனியை சேர்ந்த பேயர் நிறுவனம் வாங்குகிறது. இந்த இணைப்பின் மதிப்பு 6,600 கோடி டாலர் ஆகும். இதன் மூலம் உலகின் மிகப்பெரிய விதை மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு நிறுவனமாக பேயர் உருவாகும். இந்த பிரிவில் உலகில் நான்கில் ஒரு பங்கு பேயர் நிறுவனம் வசம் இருக்கும்.

மான்சான்டோ நிறுவனத்தைக் கையகப்படுத்த கடந்த சில மாதங்களாக நடந்த முயற்சியில், மூன்றாவது முறையாக பேயர் நிர்ணயம் செய்த விலையை மான் சான்டோ ஏற்றுக்கொண்டுள்ளது. முன்பு ஒரு பங்குக்கு 127.50 டாலர் கொடுக்க பேயர் முன்வந்தது. இப்போது 128 டாலர் கொடுக்க முன் வந்திருக்கிறது. இந்த வருடத்தில் இதுவரையில் நடந்த கையகப்படுத்தல்களில் இது மிகப்பெரிய நடவடிக்கையாகும்.

இணைப்புக்கு இரு நிறுவனங் களும் ஒப்புதல் அளித்துவிட்டா லும், ஒழுங்குமுறை அமைப்பு களின் அனுமதி தேவை. ஒரு வேளை ஒழுங்குமுறை ஆணையங் கள் இந்த இணைப்புக்கு அனுமதி தரவில்லை என்றால் 200 கோடி டாலர் இழப்பீடு வழங்கவும் பேயர் ஒப்புதல் அளித்துள்ளது.

2017-ம் ஆண்டின் இறுதியில் இணைப்பு முழுமையடையும் என பேயர் குறிப்பிட்டிருக்கிறது. பெர்ன்ஸ்டைன் (Bernstein) ஆராய்ச்சி நிறுவனம் கூறுகையில், இந்த இணைப்பு முழுமை அடைய 50 சதவீத வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாக தெரிவித்திருக்கிறது. ஆனால் முதலீட்டாளர்களின் கருத்து கணிப்புப்படி நிறுவனங்கள் இணைய 70 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

கடந்த மே மாதம் 9-ம் தேதியில் மான்சான்டோவை வாங்கும் முயற்சியில் பேயர் இறங்கியது. அப்போது வர்த்தகமான விலையை விட 44 சதவீதம் கூடுதலாக கொடுத்து வாங்குவதாக பேயர் கூறியது.

மான்சான்டோவை வாங்கு வதற்காக 1,900 கோடி டாலர் நிதி திரட்ட பேயர் திட்டமிட்டிருக்கிறது. புதிய பங்குகள், மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் வெளியிட முடிவு செய்திருக்கிறது. தவிர வங்கிகளும் கடன் வழங்க தயாராக இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தை இவ்வளவு தொகை கொடுத்து வாங்குவது இதுவே முதல் முறையாகும்.

இதன் மூலம் ஒரு பங்கு வருமானம் உயரும் என்றும், மூன்றாம் ஆண்டில் இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கும் எனவும் பேயர் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x