தி இந்து பிஸினஸ் லைன் நடத்தும் கட்டுமானம், கட்டிடக் கலை, உள் அலங்கார கண்காட்சி
‘தி இந்து’ பிஸினஸ் லைன் நடத் தும் கட்டுமானம், கட்டிடக் கலை, உள்கட்டமைப்பு கண்காட்சி (சிஏ எக்ஸ்போ 2016) சென்னை நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கியது. நாளை வரை கண்காட்சி நடக்கிறது.
‘தி இந்து’ பிஸினஸ் லைன் சார் பில் நடத்தப்படும் 4-வது கண்காட்சி இதுவாகும்.
வீட்டை அலங்கரிக்கத் தேவை யான பொருள்கள் அதாவது நீச்சல் குளம், தனி வீடுகளுக்கான எலிவேட்டர், சுவர் அலங்காரப் பொருள், தோட்டம் அமைப்பது, தோட்டத்தில் போடுவதற்கான பர்னிச்சர்கள், தேவையான டூல்ஸ், கதவுகள், ஜன்னல்கள் அவை மரம் மற்றும் இரும்பு, சிந்தெடிக்கினால் ஆனதாக இருந்தாலும் அவை அனைத்தும் கிடைக்கும் ஒரே இடமாக சிஏஐ கண்காட்சி அமைந்துள்ளது.
பிசினஸ்லைன் நாளிதழுடன் இணைந்து இதுபோன்ற கண்காட்சி ஏற்பாடுகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ஐ ஆட்ஸ் அண்ட் ஈவன்ட்ஸ் நிறு வனம் இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. கட்டு மானத் துறையில் உள்ள முக்கிய நிறு வனங்கள், தொழில்துறை வல்லுநர் கள் அனைவரும் சங்கமிக்கும் இடமாக இந்தக் கண்காட்சி அமைய இந்நிறுவனம் உரிய ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
‘தி இந்து’ பிஸினஸ் லைன் ஆசிரியர் ஆர்.னிவாசன், கிரெடாய் அமைப்பின் (சென்னை) தலைவர் சுரேஷ் கிருஷ்ணன் ஆகியோர் கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர். இதுபோன்ற கட்டுமானத் துறையினருக்கான கண்காட்சி இந்த ஆண்டு சென்னை, ஹைதராபாத் மற்றும் கோவாவில் நடத்தப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியின் அங்கமாக கட்டிடக் கலை, கட்டுமானம், உள் அலங்காரம் குறித்த கருத்தரங்கத் திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந் தது.
கிளாசிக் கிச்சன், அகஸ்டின் உடன் புராடக்ட்ஸ், கே-லைட், அம்மன் டிஆர்ஐ, சன்ஹார்ட் டைல்ஸ், சின்டெக்ஸ் உட்பட பல் வேறு கட்டுமானம்,கட்டிடக் கலை, உள்கட்டமைப்பின் முன்னணி நிறுவனங்களில் 90-க்கும்மேற்பட்ட அரங்குகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. மொட்டை மாடியில் பயன்படுத்தக் கூடிய ஆயத்தமான நீச்சல் குளம், தள்ளுபடி விலையில் சோபாக்கள், கட்டில் மெத்தை களும் கண்காட்சியில் வைக்கப்பட் டுள்ளன. இந்த கண்காட்சி வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கண்காட்சி பற்றி கிரடாய் அமைப்பின் (சென்னை) தலைவர் சுரேஷ்கிருஷ்ணன் கூறியது: தற்போதுள்ள டிஜிட்டல் உலகில் மக்கள் ஒவ்வொன்றுக்கும் அலை வதற்கு தயாராக இல்லை. ஒரே இடத்தில் கட்டுமானம், கட்டிடக் கலை, உள்கட்டமைப்பின் நிறு வனங்கள்இணைந்து இருப்பதால் பொதுமக்கள் அதிக அளவில் கண் காட்சிக்கு வருவார்கள் என்றார்.
