

இந்தியாவின் முக்கியமான நகரங் களிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு நேரடி விமான சேவை தொடங்கப் பட்டால் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை அதிக ரிக்கும். அதேபோல ஆஸ்தி ரேலியாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை யும் உயரும் என்று ஆஸ்திரேலிய சுற்றுலாத்துறைத் தலைவர் நிஷாந்த் காஷிகர் கூறினார்.
மேலும் அவர் நம்மிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் இருந்து ஆஸ்தி ரேலியாவுக்கு சுற்றுலா செல் பவர்களின் எண்னிக்கை ஆண் டுக்கு 21,500 என்ற அளவில் இருக் கிறது. இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா செல்வோர் அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு நான் காவது இடத்தில் இருக்கிறது. மஹாராஷ்டிரம், டெல்லி மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. சர்வதேச அளவில் பார்க்கும் போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டு பயணிகளில் நியூசிலாந்து முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடத்தில் சீனா இருக்கிறது. இந்தியா எட்டாவது இடத்தில் இருக் கிறது. கடந்த 2014-ம் ஆண்டு இந்தியா 11-வது இடத்தில் இருந் தது. வரும் 2025-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்ட வர்களில் முதல் ஐந்து இடங்களில் இந்தியா இருக்கும். கடந்த வருடம் 2,42,000 இந்தியர்கள் ஆஸ்தி ரேலியாவுக்கு சுற்றுலா சென்றனர்.
ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வரு பவர்களின் எண்ணிக்கை 3 லட்சம் என்னும் அளவை தாண்டி இருக்கிறது. 5 லட்சத்துக்கும் மேலான இந்திய வம்சாவளியினர் ஆஸ்திரேலியாவில் வசிக்கின்ற னர். தவிர ஆஸ்திரேலியாவில் 50,000-க்கும் மேற்பட்ட மாண வர்கள் அங்குள்ள பல்கலைக் கழகங்களில் படிக்கின்றனர். அதனால் அங்கிருந்து இங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
சுற்றுலாவை மேம்படுத்த இரு நாடுகளுக்கு இடையே நேரடி விமான போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும். ஆஸ்தி ரேலியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து போதுமான அளவுக்கு இருக்கிறது. ஆனால் இந்தியா ஆஸ்திரேலியா இடையே டெல்லியில் (ஏர் இந்தியா) இருந்து மட்டுமே நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்தியா ஆஸ்திரேலியா இடையே நேரடி போக்குவரத்தை தொடங்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் திடம் பேசி வருகிறோம். விமான நிறுவனங்கள் நேரடி போக்கு வரத்தை தொடங்கும் போது இரு நாடுகளிடையே சுற்றுலா மேம் பாடு அடையும் என்று கூறினார்.