

பெயின்டர்களுக்கு விரைவாக பெயின்ட் அடிப்பதற்கு பயிற்சி அளிக்கத் பெர்ஜர் பெயின்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக கேரள மாநிலம் கொச்சியில் ஒரு அகாடமியைத் தொடங்கியுள்ளது. கேரளம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் பெயின்டிங் அகாடமி என்ற பெயரில் இந்த பயிற்சி அகாடமி செயல்பட உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அபிஜித் ராய் தெரிவித்தார்.