

மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு சிங்கப்பூரை மையமாக கொண்டு இயங்கும் டாயிஷ் வங்கியின் உத்திகள் வகுக்கும் பிரிவின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
டாயிஷ் வங்கியில் 1997-ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்தவர். 2008-ம் ஆண்டு வரை இந்த வங்கியின் சர்வதேச மார்க்கெட் ஆராய்ச்சி பிரிவுக்கு இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
சொசைட்டி ஜெனரலே குழுமத்தில் பொருளாதார நிபுணராக பணிபுரிந்தவர்.
ஜான் டெம்பிள்டன் பவுண்டேஷன் நிறுவனத்தில் தலைமை ஆலோசகராக பணிபுரிந்தவர்.
டெல்லி பல்கலைகழகத்தில் பொருளாதார பிரிவில் இளநிலை பட்டமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமும் பெற்றவர்.
`லேண்ட் ஆப் செவன் ரிவர்ஸ்’, `தி ஓஷன் ஆப் ஷர்ன்’, ‘தி இன்கிரிடிபிள் ஹிஸ்டரி ஆப் இந்தியன் ஜியோகிராஃபி’ போன்ற புத்தகங்களை எழுதியவர்.