

கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவின் துணை நிறுவனமான ஃபோர்டு மோட்டார் நிறுவனம் அதிக எண்ணிக்கையில் பெண்களுக்கு வேலை வாய்ப் பளிக்கத் திட்டமிட்டுள்ளது. பெண் களை பணிக்கு எடுத்து அவர் களுக்கு பயிற்சி அளித்து தனது ஆலைகளில் பயன்படுத்திக் கொள்ள இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் தனது நிறுவனத்தில் பெண் பணியாளர்களின் எண் ணிக்கை 125 சதவீதம் அதிகரித் துள்ளதாகவும் நிறுவனம் வெளி யிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவ்விதம் பணிபுரி யும் பெண்களில் பெரும்பாலா னோர் முதுநிலை பணிகளில் உள்ள தாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
ஆட்டோமொபைல் துறையில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு குறைவாகவே இதுவரையில் இருந்து வந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆசிய பிராந்தியத்தில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இத்தகைய சூழலில் பெண்களை அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்துவதன் மூலம் ஆசிய பிராந்தியத்தில் குறிப்பாக சீனாவின் போட்டியைச் சமாளிக்க முடியும் என்று நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத் தலைவர் டேவ் ஷோச் தெரிவித் துள்ளார்.
ஃபோர்டு நிறுவனம் தனது பெண் பணியாளர்கள் உயர் பதவிக்கு தகுதி பெற தேவையான பயிற்சியை அளித்து அவர்களை அப்பதவிக்கு உரியவர்களாக்கும் பணியை தொடர்ந்து செய்து வருவதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.