

கிராமப்புற வாடிக்கையாளர் களுக்காக முதன்முறையாக புதிய மொபைல் செயலியை ஐசிஐசிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.
எனது ஐமொபைல் (Mera iMobile) என்கிற இந்த செயலியை ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தவிர பிற வங்கி வாடிக்கையாளர்களும் பயன்படுத்தலாம்.
இந்த செயலி மூலம் வங்கி பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகளுடன் வேளாண்மை தகவல்கள், வானிலை உள்ளிட்ட விவரங்களையும் பெறலாம்.
இதற்காக கிராமப்புறம் சார்ந்த 700 ஐசிஐசிஐ வங்கி கிளைகளில் வைஃபை சார்ந்த விழிப்புணர்வு போஸ்டர்களை வெளியிட உள்ளது. இந்த செயலி மூலம் கிசான் கிரெடிட் கார்டு, தங்க கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன் போன்றவையும் வழங்கப்படும்.