

அன்னியச் செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் 9 பைசா சரிந்து, ரூ.63.46 ஆக இருந்தது.
முன்னதாக, வர்த்தகம் நேற்று முடிவடைந்தபோது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.63.37 ஆக காணப்பட்டது.
இறக்குமதியாளர்களிடையே டாலர்களுக்கான தேவை மிகுதியாக இருந்ததால், இன்று காலை வர்த்தகம் தொடங்குபோது ரூபாய் மதிப்பு சற்றே வீழ்ச்சி கண்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.