1989-க்குப் பிறகு முதல் முறையாக சீனாவின் தர மதிப்பீட்டைக் குறைத்தது மூடி’ஸ்

1989-க்குப் பிறகு முதல் முறையாக சீனாவின் தர மதிப்பீட்டைக் குறைத்தது மூடி’ஸ்
Updated on
2 min read

சீனாவுக்கான பொருளாதார தர மதிப்பீட்டை மூடி’ஸ் குறைத்துள் ளது. தற்போது ஏ1 என்ற தர மதிப்பீட்டை சீனாவுக்கு மூடி’ஸ் வழங்கியுள்ளது. முன்னதாக சீனா ஏஏ3 என்ற தர மதிப்பீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு வகையில் பொருளா தார வளர்ச்சி குறைவாக இருப்ப தாலும் கடன் பிரச்சினை அதி கரித்து வருவதாலும் எதிர்காலத் தில் சீன அரசு பல்வேறு சவால் களை சந்திக்கும் என்று முடி’ஸ் கூறியுள்ளது. இதனால் தற்போது வலுவான நிலையில் உள்ள சீனா வின் பொருளாதாரம் எதிர்காலத்தில் வளர்ச்சி குறைவாக இருக்கும் என்று மூடி’ஸ் கணித்துள்ளது. 1989-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் சீனாவின் தர மதிப்பீட்டை மூடி’ஸ் குறைத்துள்ளது.

இது குறித்து மூடி’ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் காலங்களில் பல்வேறு கார ணங்களால் சீனாவின் நிதி வலிமை பாதிப்படையும். அதிகரித்து வரும் கடன் சுமையால் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி பாதிக்கப் படும். இருந்த போதிலும் சீர் திருத் தங்களை தொடர்ந்து மேற்கொண்டு வரும்பட்சத்தில் நாட்டின் பொரு ளாதாரமும், நிதி அமைப்பும் சில காலங்களில் மாறும். பொருளாதார வளர்ச்சி தற்போதைய நிலையி லேயே தொடர்ந்தால் வருங்காலங் களில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதம் என்ற நிலையில் இருக்கும்.

சீன அரசின் நேரடி கடன் சுமை கணிசமாக அதிகரித்து 2018-ம் ஆண்டின் ஜிடிபியில் 40 சதவீதமாக இருக்கும். 2020-ம் ஆண்டுவாக்கில் 45 சதவீதமாக உயர வாய்ப்பு இருக்கிறது.

அரசின் கடன் சுமை, குடும்ப கடன் சுமை. நிதி சாராத கார்ப்பரேட்டு களின் கடன் சுமை ஆகியன தொடர்ந்து அதிகரிக்கும். இவற்றை கருத்தில் கொண்டு தரமதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளதாக மூடி’ஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

மூடி’ஸ் சீனாவுக்கான ஒட்டு மொத்த பொருளாதார மதிப்பை ஸ்திரமான நிலையிலிருந்து எதிர் மறையான நிலைக்கு மாற்றியுள் ளது. சீனாவின் மூத்த தலைவர்கள் பைனான்ஷியல் ரிஸ்க் மற்றும் முதலீடு சார்ந்த பிரச்சினைகளை கண்டறிந்துள்ளனர். இந்த ஆண்டில் இதற்கு முன்னுரிமை தரப்படும் என்று கூறியுள்ளனர்.

தர மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ள தால் சீனா வாங்கும் கடனுக்கான வட்டி அதிகரிக்கும். சீனாவின் ஷாங்காய் பங்குச் சந்தை நேற்றைய வர்த்தகத்தின் 1% சரிவை கண்டது. கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு சீனா பங்குச் சந்தை நேற்று சரிவைக் கண்டது. மேலும் டாலருக்கு நிகரான யுவானின் மதிப்பு 0.1% சரிவை கண்டது. உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை களில் யுவானின் மதிப்பு சரிந்தது.

மூடி’ஸ் சீனாவுக்கான தர மதிப் பீட்டை குறைத்ததால் சிறிதளவு எதிர்மறை தாக்கம் இருந்தது. முக்கியமாக இந்த நேரத்தின் சீனா வங்கி அமைப்புகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று மிஷுஹோ வங்கியின் பொருளாதாரம் மற்றும் உத்திகள் வகுக்கும் பிரிவின் தலைவர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.

``சீனாவுக்கான தர மதிப்பீட்டை மறுபரிசீலனை செய்வதற்கு எந்த வொரு குறிப்பிட்ட கால அளவையும் மூடி’ஸ் கொண்டிருக்கவில்லை. ஆனால் தினசரி முறையில் சீனாவின் பொருளாதார நிலைமையை ஆராய்ந்து வருவோம்’’ என்று மூடி’ஸ் சோவர்ஜின் ரிஸ்க் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மேரி டிரோன் தெரிவித்துள்ளார்.

சீனாவின் தர மதிப்பீட்டை மூடி’ஸ் குறைத்துள்ளதால் பெரிதாக பாதிப்பு இருக்காது என்று வல்லுநர் கள் தெரிவித்துள்ளனர். ``தர மதிப்பீடு குறைந்ததால் மிகப் பெரிய பாதிப்பு இருக்காது. கடந்த முறை மூடி’ஸ் தர மதிப்பீட்டை குறைத்த போதிலும் சீனாவின் பொருளாதார அமைப்பு சிறப்பாகவே இருந்தது. அதுமட்டுமல்லாமல் கொள்கை வடிவமைப்பாளர்கள் கடன் பிரச்சினை பற்றி மிகுந்த விழிப்புடன் உள்ளனர். அதற்குரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று மின்செங் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் வென் பின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in