

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றக் கூடிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
முதல்முறை
பொதுவாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்தான் இதுபோன்று வீட்டிலிருந்து பணியாற்றும் வசதியை அளித்து வருகின்றன. முதல் முறையாக பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது பணியாளர்களுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்துக்கு பாரத ஸ்டேட் வங்கியின் இயக்குநர் குழுமம் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. அவசர பணிகளை வீட்டிலிருந்தபடியே பணியாளர் தங்களது மொபைல் மற்றும் லேப்டாப் உதவியோடு நிறைவேற்ற முடியும்.
பாரத ஸ்டேட் வங்கி மொபைல் கம்ப்யூட்டிங் டெக்னாலஜீஸ் நுட் பத்தை பின்பற்றுகிறது. இதனால் இதை எந்த பகுதியிலிருந்தும் நிர்வகிக்க முடியும். பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்தை செல்போன் மூலம் மேற்கொள்ள முடியும் என்று எஸ்பிஐ வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
வங்கி பின்பற்றும் தொழில் நுட் பம் மற்றும் அளிக்கும் சேவை யானது எம்ஐஎஸ் மற்றும் டேஷ் போர்டு மூலம் கண்காணிக்கப் படுகிறது. இதனால் அளிக்கப்படும் சேவையை கண்காணிக்க முடிவ தோடு மேம்பட்ட சேவையையும் அளிக்க முடியும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி சார்ந்த திட்டங்கள் விற் பனை, சந்தைப்படுத்தல், வாடிக்கை யாளர் மேலாண் நிர்வாகம் (சிஆர்எம்), சமூக வலைதளங்கள் நிர்வாகம், தீர்வு மற்றும் புகார்கள் உள்ளிட்ட பணிகளை வீட்டிலிருந்த படியே மேற்கொள்ள முடியும். இதனால் பணியாளர்களின் செயல் திறன் பல மடங்கு அதிகரிக்கும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது